ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:45 IST)

ரூ.399க்கு 3300 ஜிபி டேட்டா.. அள்ளி வழங்கும் பி.எஸ்.என்.எல்.. ஏர்டெல், ஜியோ அதிர்ச்சி..!

BSNL Network
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் கடந்த சிலர் வாரங்களாக அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது 399 ரூபாய்க்கு 3300 ஜிபி டேட்டா என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பிஎஸ்என்எல் தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தில் 3300 ஜிபி டேட்டாவை பெறலாம் என்றும் இது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 499 ரூபாய் என்று இருந்த இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டு 399 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்றும் இதற்கும் மாதம் 3300 ஜிபி டேட்டாக்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரான்பேண்ட் திட்டத்தில் பயனாளிகள் சராசரியாக தினமும் 100 ஜிபிக்கும் மேல் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து முழுமையாக அறிய பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு நேரில் சென்று அல்லது பிஎஸ்என்எல் இணையத்தில் சென்றோ தெரிந்து கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

Edited by Mahendran