செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (08:38 IST)

திருமணமான 8 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்.. மின்சாரம் தாக்கியதால் சோகம்..!

கடலூர் அருகே திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் என்ற பகுதியில் விமல் ராஜ் என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டர் ஆன இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கிய நிலையில் அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
 
அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
உயிரிழந்த 25 வயதான விமல் ராஜுக்கு திருமணம் ஆகி 8 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva