1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:59 IST)

2021 நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி தொடங்கும் தேதி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அந்த தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை தயார் படுத்துவதற்காக இலவசம் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கி நடத்தி வருகின்றன 
 
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பதும் அவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாக வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சிக்கான தகவலை தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் இலவச நீட் பயிற்சி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
நடப்பாண்டு பள்ளி கல்வித்துறை உடன் இணைந்து கோவை தனியார் அமைப்பு 2021 ஆம் ஆண்டுக்கான நீட் பயிற்சியை அளிக்க உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது