இரண்டு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்: தவித்த விமானி
திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை இரண்டு மணி நேரம் தரையிறக்க முடியாமல் விமானி தவித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை 5.35 மணியளவில் கோலாலம்பூர் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானத்தில் திடீரென்று கோலாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானி மீண்டும் திருச்சி விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்க முடிவு செயதார். ஆனால் திட்டமிட்டபடி தரையிறக்க முடியாததால், விமானம் சுமார் இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.35 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதனிடையே ஏராளமான பொது மக்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் திருச்சி விமான நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்