மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த குழந்தை; இருவர் கைது
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொருக்குபேட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ், அவரது மகன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாஞ்சா நூலால் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது தடையை மீறி இவ்வாறு பட்டம் விடப்பட்ட சம்பவத்தால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.