18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்...! தமிழகத்தில் இதுதான் முதல்முறை!
தமிழகத்தில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதால் இரண்டு பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து. இதன் காரணமாக குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அந்த குழந்தை கோமா நிலைக்குச் சென்றது.
இந்த நிலையில் அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டதை அடுத்து பெற்றோரின் அனுமதியுடன் அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன.
இந்த கல்லூரியில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கு கல்லீரலும் வேலூரில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டன. தமிழ்நாட்டில் முதல் முறையாக 18 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அதன் காரணமாக இரண்டு பேர் உயிர் பிழைத்து உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.யை
Edited by Mahendran