செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:08 IST)

சென்னையில் திடீரென சீல் வைக்கப்பட்ட 130 கடைகள்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

sealed
சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது
 
வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வாடகை தொகை நிலுவையில் இருந்த 130 கடைகளில் 40 லட்ச ரூபாய் வரவேண்டிய உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அந்த 130 கடைகளுக்கு சீல் வைத்தனர்
 
வாடகையை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் செலுத்திய பின்னரே சீல் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது