1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:03 IST)

கடலூரில் 12ம் வகுப்பு மாணவன் ஜீவா குத்திக்கொலை.. தவறான உறவுக்கு அழைத்தது தான் காரணமா?

கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கு தவறான உறவுக்கு அழைத்தது காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
ஜீவாவின் சகோதரியை ஆனந்த் காதலித்து வந்ததாகவும், அதற்கு ஜீவா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் கடந்த 2 நாட்களாக சகோதரியின் செல்போனை, ஜீவா வாங்கி வைத்திருந்ததால், ஆத்திரத்தில் ஆனந்த் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
6 மாதத்திற்கு முன்பு, ஜீவாவை ஆனந்த் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவறான உறவுக்கு அழைத்தது குறித்து ஆனந்தின் குடும்பத்தாரிடம் ஜீவா கூறியதும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
 
Edited by Siva