திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (08:04 IST)

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு.. முடிவுகள் இன்று வெளியீடு..!

பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த துணை தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஏற்கனவே பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக உள்ளது.  
 
இந்த தேர்வின் முடிவுகளை இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும்  அதுமட்டுமின்றி மாணவர்களின் தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவு குறித்த குறுஞ்செய்தி வரும் என்றும் கூறப்படுகிறது.  
 
துணைத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் இன்று வெளியாக உள்ள தேர்வு முடிவுகளை காண ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva