திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (21:09 IST)

பொதுத்தேர்வில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!

suicide
நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று ஒரே நாளில் 11 மாணவர்கள் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரே நாளில் 11 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் 28 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது