வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (12:37 IST)

1000 ரூபாய் கொடுப்போம்: தமிழக ஆளுனர் அறிவிப்பு; எதற்காக தெரியுமா?

பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல கட்ட நடவடிக்கைகளாக எடுத்து வருகிறது என கூறினார்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் என அழுத்தமாக பேசினார். மேலும் பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கூறினார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் தொகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார்.