1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:16 IST)

சென்னையில் ரெட் லைட் ஏரியா வேண்டும்: தயாரிப்பாளர் அதிரடி

சென்னயில் மும்பை போல பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்க வேண்டும். சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி இருக்க வேண்டும் என்று புரியாத புதிர் படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தெரிவித்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பாலியல் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் புரியாத புதிர் படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்துள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும், பாலியல் கல்வி மற்றும் நகரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
 
படத்தில் சான்ட்ரா ஏமி பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இயக்குனர் யுரேகா பத்திரிகையாளராக நடித்துள்ளார். படத்தில் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை ஆனால் இது பெரியவர்களுக்கான படம் என்பதால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
 
முப்மையில் பாலியல் தொழிலுக்கு சட்டப்படி அனுமதி உள்ளது. அதுபோல சென்னையில் பாலியல் தொழிலுக்கு சட்டப்படி அனுமதி அளிக்க வேண்டும். சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி இருக்க வேண்டும், என்றார்.