அழகிய ஹைக்கூ....

வியாழன், 3 செப்டம்பர் 2015 (03:44 IST)
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம். அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன?  படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும். இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப் பாருங்களேன்.
 

 
சுமையான போதும் 
பாதுகாப்பு 
நத்தையின் கூடு !
 
கடவுச்சீட்டு விசா இன்றி 
கடல் கடந்து பயணம் 
பறவை !
 
சேற்றில் மலந்தும் 
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
 
குரல்   இனிமை 
குயில்
நிறம் கருமை !
 
அடைகாக்கா அறியாவிடினும் 
காக்காவின் தயவில் பிறப்பு 
குயிலினம் !
 
நம்பமுடியாத உண்மை 
மானை விழுங்கும் 
மலைப்பாம்பு !
 
 
இனிமைதான் 
ரசித்துக் கேட்டால் 
தவளையின் கச்சேரி  !
 
இனிய அனுபவம் 
நனைந்து பாருங்கள் 
மழை !
 
மழையில் நனைந்தும் 
கரையவில்லை வண்ணம் 
மயில் தொகை !
 
நிலா வேண்டி 
அழும் குழந்தை 
அமாவாசை !
 
முதல் மாதம் கனமாக 
கடைசி மாதம் லேசாக 
நாட்காட்டி !
 
மீண்டும் துளிர்த்தது 
பட்ட மரம் 
மனிதன் ?
 
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில் 
செயற்கை  மலர்கள்
 
பாடுவதில்லை 
நாற்று நாடுவோர் 
பண்பலை வானொலி !
 
ரேகை  பார்த்தது ஈசல் 
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
 
மணி  காட்டாவிட்டாலும் 
மகிழ்ச்சி தந்தது 
மிட்டாய் கடிகாரம் !
 
 
 -:கவிஞர் இரா .இரவி

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

Show comments