2006 சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை
தமிழகத்தின் 13 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி 96 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைபற்றியது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி எதிர்கட்சி என்ற தகுதியைப் பெற்றது. திமுக மொத்தம் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் வென்றது. அதிமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 61 தொகுதிகளில் வென்றது.
தேமுதி 232 தொகுதிகளில் போட்டியிட்டு 1 ( விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி )தொகுதியில் மட்டும் வென்றது.