திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. மற்றவை
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (21:18 IST)

நாளை காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து - திரையரங்க உரிமையாளர்கள்

cinema poster
நாளை புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்து,  அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட  6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில்,சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து 
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை அறிவிக்கப்படுள்ளது.
 
இதனால், நாளை புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.