திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (18:40 IST)

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எத்தனை தடங்கல்கள் வந்தாலும் முன்னோக்கி செல்லும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.  குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த நிலையிலும்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். கலைத்துறையினர் கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். கட்சியில் நிம்மதி உண்டாகும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.