வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:45 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.


 


பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அரசாங்கத்தாலும்,  அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் உங்களை தாமதமாக புரிந்துக் கொள்வார்கள். உறவினர்கள்,  நண்பர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.

அவ்வப்போது விபத்து,  வீண் செலவு,  அலைச்சல்,  முதுகு வலி ஏற்படக்கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள்,  பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 
 
கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். ராஜ தந்திரத்தால் வெற்றி பெறும் மாதமிது.         
 
அதிஷ்ட தேதிகள்: 4, 5, 6, 17, 24
அதிஷ்ட எண்கள்: 3, 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி