வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:22 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும்.


 


குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள்,  நண்பர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். அவ்வப்போது ஒருவித பயம்,  படபடப்பு வந்துச் செல்லும்.

முன்கோபத்தை குறையுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். யோகா,  தியானம் செய்வது நல்லது. சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். 
 
கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். தட்டுத்தடுமாறி கரையேறும் மாதமிது.
 
 
அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 11
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி