புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (17:14 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.


 


குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள்.

உறவினர்கள்,  நண்பர்களால் நன்மை உண்டாகும். கறாராகப் பேசி வர வேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீர புது வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். அவ்வப்போது வேலைச்சுமை,  தூக்கமின்மை,  சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்களால் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்களின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் வரும். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 9, 5
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி