செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 1 மே 2017 (15:31 IST)

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும்.


 


கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாங்குவது,  விற்பது நினைத்தபடி முடியும். என்றாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒரு வித படபடப்பு,  பேச்சால் பிரச்னை,  அலைச்சல் வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! அவ்வப்போது குழம்பினீர்களே! இனி புதிய பாதை தெரியும்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 15, 17, 14
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: 
செவ்வாய், வியாழன்