1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (18:17 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். முன்கோபம் விலகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.


 


குழந்தை பாக்யம் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். மனக்கசப்பால் விலகி நின்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

புது வேலைக் கிடைக்கும். சுக்ரன் 3-ல் நிற்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்ய என்ன வழி இருக்கிறது என்று யோசிப்பீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். 
 
அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சிக்கல், பிரச்னைகள் தீருவதுடன் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 21, 30
அதிஷ்ட எண்கள்: 4, 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி