Daily Horoscope
✕

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

Updated: வெள்ளி, 31 மே 2019 (19:20 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பாடுபட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும்.

பெண்களுக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: வினாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

எல்லாம் காட்டு

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!

நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments