Daily Horoscope
✕

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Updated: வியாழன், 12 ஜூலை 2018 (12:51 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனது தோரணையால் எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 


எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடியும்.

அரசியல்துறையினர் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
பரிகாரம்:  முருகனை அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments