திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:36 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். 

 
பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
 
குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து கொஞ்சம் டென்ஷன், ஒருவித படபடப்பு, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துப் போகும். சொத்து வாங்குவது, விற்பது இழுபறியாகி முடியும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். 
 
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். புது சலுகைகள் கிடைக்கும். 
 
கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 27 
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்