1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:28 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1,10,19,28

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். கணவன் & மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு இருந்ததே! அந்த பற்றாக்குறை குறைந்து பணப்புழக்கமும் அதிகரிக்கும். நீண்ட நெடுநாட்களாக சகோதரிக்கு தள்ளி போன திருமணம் கூடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உங்களுக்கு ஆதரவாகவும் பேசுவார்கள். புது வேலைக் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். என்றாலும் இந்த மாதத்தில் கொஞ்சம் வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மூத்த தலைவர் உங்களிடம் சில ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! வசதி வாய்ப்புகள் பெருகும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:1,9,10,12,21 
அதிஷ்ட எண்கள்:2,6
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே
அதிஷ்ட கிழமைகள்:திங்கள்,வெள்ளி