1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 31 ஜூலை 2017 (17:43 IST)

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வி. ஐ. பிகள் உதவுவார்கள்.



 


ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. மாதத்தின் மையப் பகுதி முதல் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுதாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். முதுகு, மூட்டு வலி, கருத்து மோதல்கள் வரக்கூடும். 
 
அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். 
 
கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். அலுவலகத்தை நவீன மயமாக்க திட்டமிடுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். எதிர்நீச்சல் போட வேண்டிய மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்