திங்கள், 12 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (15:22 IST)

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

புத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். புதிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மன துயரம் நீங்கும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்:  அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.