வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

தேவையான பொருட்கள்:
 
வஞ்சிரம் மீன் கருவாடு - 1/4 கிலோ
சிறிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 1 முழு பூண்டு
காய்ந்த மிளகாய் - 5
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
கொத்தமல்லி - தெவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்


 
 
செய்முறை:
 
வஞ்சிரம் மீன் கருவாடு துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.
 
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
 
பின்னர் கருவாடு துண்டுகளை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவை இல்லை. சுவை பார்த்து பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம். கறிவேப்பிலையும், கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு தயார்.