புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

டேஸ்டியான முட்டை சப்பாத்தி செய்ய...!

தேவையான  பொருட்கள்:
 
சப்பாத்தி - 5
முட்டை - 4
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1  
பெ.வெங்காயம் - 3  
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
 
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய்  ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதனுடன்  முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.
 
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும். அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். சுவையான முட்டை சப்பாத்தி தயார்.