Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான முறையில் முட்டை குழம்பு செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 26 டிசம்பர் 2020 (13:45 IST)
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
தனியா தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
கரம்மசாலா பொடி - சிறிதளவு
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய்,  கிராம்பு போன்ற வற்றை சேர்த்து வதக்கவும்.

பின் அவை நன்கு வெடித்தப் பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.  பிறகு இஞ்சி பூண்டு விழுதைப் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
 
நன்கு வதக்கியப் பின் அத்துடன் தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகிய வற்றைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம்  கழித்து தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
 
குழம்பு நன்கு கொதித்தப் பிறகு உப்பு சுவை பார்த்து, பின் அடுப்பை சிம்மில் வைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடம் தட்டை வைத்து மூடி, வேக  விடவும். இப்போது சுவையான, ஈஸியான முட்டை குழம்பு தயார். இந்த குழம்பை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments