Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இறால் பிரியாணி செய்ய !!

Written By Sasikala
Updated: வியாழன், 25 நவம்பர் 2021 (12:26 IST)
தக்காளி - 200 கிராம்
மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்) - அரை ஸ்பூன்
சோம்புத்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மிள்காய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா - கைபிடியளவு.
எலுமிச்சை -பாதி பழம்,
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
இறாலை சுத்தம் செய்து 5 தண்ணீர் விட்டு அலசி, உப்பு, மஞ்சள் போட்டு திரும்பவும் அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும். பின்பு அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு, உப்பு, முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.
 
மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்நது, வெங்காயம் சிவந்ததும், இஞ்சிபூண்டு வதக்கி கரம்மசாலா, சீரகம், சோம்பு பொடி சேர்த்து, வதக்கவும்.
 
வதங்கிய இஞ்சி பூண்டு கரம் மசாலா வகைகளுடன்,மல்லி புதினா ,மிள்காய் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி, முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.
 
பிரியாணி மசாலா தயார் ஆனவுடன் ஊற வைத்த அரிசியை ஒன்றரை அளவு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும். உப்பு சரிபார்க்கவும். அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு வதக்கி வைத்த இறாலை பாதி வெந்து வந்த பிரியாணி சாதத்துடன் கலந்து பிரட்டி விடவும்.எலுமிச்சை பிழியவும்.மூடி விடவும்.சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.
 
பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும்.அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். சுவையான இறால் பிரியாணி தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments