Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:54 IST)
தக்காளி - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
பட்டை, பிரியாணி இலை - சிறிதளவு
கிராம்பு, ஏலக்காய் - தலா 4
மல்லி தழை -1 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1

செய்முறை:
 
குக்கரில் தேவையான அளவு எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை,ஏலக்காய் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது,  வெங்காயம்  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
 
இத்துடன் தக்காளி,கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதங்கியவுடன் சிக்கன்,  சிறிதுளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.
 
தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணை பிரிந்து மேல் வரும் போது 1 கப் அரிசிக்கு 1  1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
 
தண்ணீர் நன்கு கொதித்தும் ஊறவைத்த அரிசியை கழுவி போட்டு மீதமுள்ள கொத்தமல்லி, புதினா தழையை சேர்த்து வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும்.
 
அரிசி பாதி அளவு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். முக்கால்பாகம் வெந்தவுடன் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பின்னர் 2 விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments