ஆந்திரா ஸ்டைலில் ​​சிக்கன் கிரேவி செய்ய !!

Written By Sasikala
Updated: புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:01 IST)
தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் நறுக்கியது
துருவிய தேங்காய் அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பட்டை துண்டு - 1
ஏலக்காய் - 2
கிராம் - 2
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து  தனியா, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து சுமார் 2 நிமிடத்திற்கு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரை கப் தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் கசகசாவையும்  சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பின் இத்துடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் ஓரளவிற்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிட்டு, பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து கொதித்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments