Daily Horoscope
✕

சூப்பரான சுவையில் சிக்கன் போண்டா செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:17 IST)
மஞ்சள்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
பொட்டுக்கடலை - 50 கிராம்
இஞ்சி - 2 சிறிய துண்டு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
 
அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
 
போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும். அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூப்பரான சிக்கன் போண்டா தயார்.

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments