Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு கோழி குருமா செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 22 நவம்பர் 2019 (17:41 IST)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
 
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு  வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
 
மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில்  அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும். அதில் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டு கோழி குருமா தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments