Daily Horoscope
✕

சுவை மிகுந்த முட்டை மசாலா செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: சனி, 31 ஜூலை 2021 (18:37 IST)
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி
இலை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:
 
முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும். தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும்  வரை வதக்கவும்.
 
பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். சுவை மிகுந்த முட்டை மசாலா தயார். 

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments