Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சிக்கன் சூப் செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 11 மே 2021 (15:47 IST)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து பொடியாக்க:
 
மல்லி விதை (தனியா) - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:
 
சிக்கனை சுத்தம் செய்து எலும்பிலுள்ள கறியை இயன்ற வரை தனியாக எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எலும்பை அம்மி அல்லது உரலில் வைத்து தட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி  வைக்கவும்.
 
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எலும்புடன் வெங்காயம்,  தக்காளி, இஞ்சி, பூண்டு, அரைத்த விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். வெந்ததும் சூப்பைத் தனியாக வடிகட்டி வைக்கவும்.
 
கடாயில் பட்டர் போட்டு உருகியதும், ப்ரெட் துண்டுகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிறிதளவு உப்பு (சிக்கன் வதங்க), மீதமுள்ள மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சிக்கன் சூப் தயார். பரிமாறும் போது வறுத்த ப்ரெட் துண்டுகளைச்  சேர்க்கவும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments