வீட்டிலேயே சிக்கன் ஷவர்மாவை எப்படி செய்வது....?

Written By Sasikala
Updated: வியாழன், 11 நவம்பர் 2021 (17:15 IST)
மைதா - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
முட்டைகோஸ் - ஒரு கப்
மயோனீஸ் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன் எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, தயிர், எண்ணெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
 
இதனை, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில், சிக்கன் துண்டுகள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 45 நிவீடங்கள் ஊற வைக்கவும். தற்போது, மாவை உருட்டி, திரட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டுக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வேக வைத்து வறுத்தெடுக்கவும். சிக்கன் நன்றாக வேகும்வரை பிரட்டிக் கொண்டே இருக்கவும்.
 
சிக்கன் வெந்ததும் ஆறவைத்து, சிறிய துண்டுகளாக பீய்த்துக் கொள்ளவும். ஒரு தட்டில் ரொட்டியை வைத்து அதன் மீது மயோனீஸ் தடவி, அதன் நடுவில் சிறிதளவு சிக்கனை வைக்கவும். பின்னர் அதன்மீது, பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் வைத்து ரோல் செய்யவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் ஷவர்மா தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments