Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் சமோசா செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: திங்கள், 14 அக்டோபர் 2019 (17:58 IST)
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கிராம்பு - 6
மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி  வைத்துக் கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக் கறியை சேர்த்து வதக்கவும்.
 
சிக்கன் வெந்ததும் உப்பு, கரம்மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து  ஓரங்களில் மூடவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான சிக்கன் சமோசா தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments