1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌சிவகா‌‌சி ப‌ட்டாசு ஆலை‌யி‌ல் பய‌ங்கர ‌வெடி ‌விப‌த்து - 53 ப‌ே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லி

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து
சிவகா‌சி ப‌ட்டாசு ஆலை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கர வெடி ‌விப‌த்‌தி‌ல் 56 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் மய‌‌க்கமடை‌ந்து மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பலரு‌க்கு ‌80 சத‌வீத‌ அளவு‌க்கு ‌தீ‌க்காய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.
FILE

‌ சிவகா‌சி அருகே முத‌லி‌ப்ப‌ட்டி‌‌‌யி‌ல் உ‌ள்ள ஓ‌‌ம் ச‌க்‌தி ஃபய‌ர் ஒ‌ர்‌க்‌ஸ் எ‌ன்ற ப‌ட்டாசு ஆலை‌யி‌ல் இ‌ன்று 250‌க்கு‌ம் மே‌‌ற்ப‌ட்டோ‌ர் வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

சுமா‌ர் 40 அறைக‌ள் கொ‌ண்ட இ‌ந்த ப‌ட்டாசு ஆலை‌யி‌ல், ஒரு அற‌ை‌‌யி‌ல் ப‌ட்டாசு வெடி‌த்து ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌தீ மளமளவென பர‌வியதா‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள அறைக‌ளி‌ல் இரு‌ந்த ப‌ட்டாசுகளு‌ம் வெடி‌த்து சித‌றியது.

அ‌ப்போது, வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த 40 பே‌ர் உட‌ல் கரு‌கி ச‌ம்பவ இட‌த்‌திலேயே ப‌‌லியானா‌‌ர்க‌ள். மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அடு‌த்தடு‌த்து உ‌யி‌‌ரி‌ழி‌ந்து வருவதா‌ல், த‌ற்போது ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 53 ஆக உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

காய‌ம் அடை‌ந்த பல‌‌ரு‌க்கு 80 சத‌வீத‌‌ற்கு மே‌ல் ‌தீ‌க் காய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌க்கு‌‌ம் எ‌ன்று அ‌ஞ்ச‌ப்படு‌கிறது. பட‌ம் ‌பிடி‌க்க செ‌ன்ற ப‌‌த்‌தி‌ரிகையாள‌ர் ஒருவரு‌ம் ‌‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ண்டா‌ர்.

இ‌தி‌ல் வேதனை எ‌ன்னவெ‌ன்றா‌ல், ப‌ட்டாசு ‌விப‌த்தை வேடி‌க்கை பா‌ர்‌க்க செ‌ன்ற பொதும‌க்களு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ப‌ட்டாசு வெடி‌த்த‌‌தி‌ல் அத‌ன் மூல‌ப்பொரு‌ள் பர‌வியதா‌ல் 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் மய‌க்க‌ம் அடை‌ந்தன‌ர். அவ‌ர்‌க‌ள் உடனடியாக மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌தீயணை‌ப்பு வ‌ண்டிக‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து ‌தீயை அணை‌த்தது. 100 அடி உயர‌த்த‌ி‌ற்கு மே‌ல் புகை சூ‌‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல் ‌தீயை அணை‌க்க ‌வீர‌ர்க‌ள் போராடின‌ர். ஒரு வ‌ழியாக ‌தீ அணை‌க்க‌ப்ப‌ட்டது.

‌விப‌த்து நட‌ந்து இட‌த்து‌க்கு மரு‌த்துவ‌க் குழு அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அமை‌ச்ச‌ர் செ‌ய்‌தி‌‌த்துறை அமை‌ச்ச‌ர் ராஜே‌ந்‌திர பாலா‌‌ஜி கூ‌றினா‌ர். மேலு‌ம் ச‌ம்பவ இட‌த்து‌க்கு அமை‌ச்ச‌ர் ‌‌விரை‌ந்து‌ள்ளா‌ர்.