1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ம‌னித நேய‌ம் மேலோ‌‌ங்க உறு‌தி ஏ‌ற்போ‌ம்: தலைவ‌ர்க‌ள் ‌கி‌றி‌ஸ்தும‌‌ஸ் வா‌‌ழ்‌த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்து சுர்ஜித் சிங் பர்னாலா ஜெயலலிதா வைகோ கேவிதங்கபாலு திருநாவுக்கரசர்
சகோதரத்துவமும், மனித நேயமும் மேலோங்க கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உறுதி மேற்கொள்வோம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
த‌‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா : இயேசு பிரான் போதித்த அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை இந்த நாளில் நினைவுகூர்ந்து உலகில் சமத்துவம், சகோதரத்துவம் நிலவ உறுதி பூணுவோம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

webdunia photoFILE
அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செய‌ல‌ர் ஜெயலலிதா: உலகத்தை ஆட்கொள்ள வந்த இயேசு பிரானின் பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்து‌க‌ள்.

webdunia photoFILE
ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ : சகோதரத்துவமும், மனித நேயமும் மேலோங்க கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உறுதி மேற்கொள்வோம்.

webdunia photoFILE
த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.தங்கபாலு : இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று அவர் அறிவுறுத்திய போதனையின்படி வன்முறை ஒழிந்து, அமைதி நல்லிணக்கம் மலர்ந்து மகிழ்ச்சி பெருகிட ஒன்று சேர்ந்து துதிப்போம்.

மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் திருநாவுக்கரசர் : அன்பு, பொறுமை, சாந்தி, சமாதானம் உள்ளிட்ட நற்பண்புகளை உலகிற்கு தந்து வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி எனது சார்பிலும், பா.ஜ.க. சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.