1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌திரும‌‌ங்கல‌ம் தொகு‌தி‌யி‌ல் தே.மு.‌தி.க. போ‌ட்டி‌யிடு‌ம்: விஜயகா‌ந்‌த்

திருமங்கலம் தேமுதிக விஜயகாந்த்
திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி‌யி‌ன் தலைவர் விஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
உதகம‌ண்டல‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், திருமங்கலம் ச‌ட்டம‌ன்ற‌த் தொகுதியில் தே.மு.தி.க கண்டிப்பாக போட்டியிடு‌ம் எ‌ன்று‌ம் த‌னி‌த்து‌த் தா‌ன் தே‌ர்தலை ச‌ந்‌தி‌‌க்கு‌ம் எ‌ன்றா‌ர்.

விலைவாசி உயர்வாலும், தொடர் மின்வெட்டாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ம‌க்க‌ள், இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் எ‌ன்றா‌ர்.

நாடாளுமன்ற தேர்த‌லி‌ல் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு நீங்கள் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறதே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ‌விஜயகா‌ந்‌த், யாரையும் நம்பி நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பிதான் கட்சி ஆரம்பித்துள்ளேன். முதலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கட்டும். அதற்கு பின் இது குறித்து பேசலாம் எ‌ன்றா‌ர்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பணியை எப்போது ஆரம்பிக்க இருக்கிறீர்கள் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, இந்த நேரம் முதல் ஆரம்பித்துவிட்டோம் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் ‌ப‌தி‌ல் ‌அ‌ளி‌த்தா‌ர்.