1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தானி ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்!

வெங்கடசுப்பா ரெட்டியார் சிறிலங்க இராணுவம் போர் நிறுத்தம் இலங்கை புதுவை தானி ஒட்டுனர்கள்
இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுவையில் தானி ஓட்டுனர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையருகே நடந்த இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தானி ஒட்டுனர்கள், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.