1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஒகேன‌க்க‌ல்: ‌பிரதம‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் பே‌ச்சு- எடியூர‌ப்பா கோ‌ரி‌க்கை!

ஒகேன‌க்க‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் எடியூர‌ப்பா
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்‌சனை‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் மு‌ன்‌னிலை‌யி‌ல் முத‌ல்வ‌ர்க‌ள் பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ரிட‌ம் வ‌லியுறு‌த்‌தியுள்ளதாக க‌ர்நாடக முத‌‌ல்வர் எடியூர‌ப்பா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌ம் தொட‌ர்பாக‌த் த‌மிழக‌ முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌‌ப் பே‌ச்சு நட‌த்துவத‌ற்காக‌ வந்த அவ‌ர், செ‌ன்னை ‌விமான‌ நிலைய‌த்‌தி‌‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சுகை‌யி‌ல், "ஒகேன‌க்‌க‌ல் ‌பிர‌ச்‌சனை‌யி‌ல் க‌ர்நாடகா‌வி‌ன் ‌நிலை‌ ப‌ற்‌றி கட‌ந்த ஒரு மா‌த‌த்து‌க்கு மு‌ன்னரே ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்கை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து ‌வி‌‌ள‌க்‌கியு‌ள்ளே‌ன்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "இ‌ந்த‌ப்‌ ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் பே‌ச்சு மூல‌ம் சுமூக‌த் ‌தீ‌ர்வு ஏ‌ற்பட ‌பிரதம‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு மா‌நில முத‌‌ல்வ‌ர் பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் தெ‌ரி‌வி‌த்தே‌ன். இ‌ந்த ‌பிர‌‌ச்‌சனை‌யி‌ல் ‌பிரத‌மர்தா‌ன் முடிவு எடு‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ண்டை மா‌நில‌ங்களுட‌ன் ‌எ‌ப்போது‌ம் ந‌ல்லுறவை வ‌ள‌ர்‌க்கவே ‌விரு‌ம்பு‌கிறே‌ன். ந‌‌ட்பு ‌ரீ‌தி‌யிலான உறவை‌யே எ‌ப்போது‌ம் ‌விரு‌ம்பு‌கிறே‌ன். அதையே ‌தொட‌ர்‌ந்து பி‌ன்ப‌ற்று‌கிறே‌ன்" எ‌ன்று‌ம் எடியூர‌ப்பா கூ‌றினா‌ர்.