1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

செ‌ன்னை‌யி‌ல் மாநகரா‌ட்‌சி ப‌ள்‌ளிக‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி ‌திற‌ப்பு!

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன்
சென்னையில் ம‌க்க‌ளை வெயி‌ல் கடுமையாக வா‌ட்டி எடு‌ப்பதா‌ல் மாநகராட்சி பள்ளிகள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி திறக்க‌ப்படு‌ம் எ‌ன்று மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த போதிலும் சென்னை நகரில் தொடர்ந்து வெயில் வாட்டி எடு‌‌க்‌கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வரு‌கிறா‌ர்க‌ள்.

கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 2ஆம் தேதி மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வெயில் தொடர்ந்து கொளுத்துவதால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், பள்ளிகள் திறக்கும் தேதி ஒரு வார காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

மாநகராட்சி பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்து‌ள்ளா‌ர்.