1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ல் ஒருவ‌ர் ப‌லி, 133 பே‌ர் படுகாய‌ம்!

புது‌க்கோ‌ட்டை அ‌ரியலூ‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு ம‌ங்கலபுர‌‌ம் துரைய‌ப்ப‌ன் தே‌த்த‌ம்ப‌ட்டி திருமனூ‌ர்
புது‌க்கோ‌ட்டை, அ‌ரியலூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு ‌வீர ‌விளையா‌ட்டி‌ல் ஒருவ‌ர் ப‌லியான‌ா‌ர். 133 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் ம‌ங்கலபுர‌த்‌தி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு ‌‌வீர விளையா‌ட்டை‌ பா‌ர்வை‌யிட‌ செ‌ன்ற தே‌த்த‌ம்ப‌ட்டி ‌கிராம‌த்தை‌ச் சே‌ர்‌ந்த துரைய‌ப்ப‌ன் ( 45) எ‌ன்ப‌வரை காளை மு‌ட்டியது. இ‌தில் படுகாயமடை‌ந்த அவரை ‌சி‌கி‌ச்சை‌க்காக அரு‌கி‌லு‌ள்ள அரசு மரு‌த்துவமனை‌‌க்கு கொ‌ண்டு செ‌ன்றன‌ர்.

ஆனா‌ல், அ‌‌‌ங்கு அவ‌ர் ‌சி‌கி‌‌ச்சை பல‌னி‌ன்‌றி இற‌ந்தா‌‌ர். மேலு‌ம் இ‌‌ந்த போ‌ட்டி‌யி‌ல் 10 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌‌ர். அவ‌ர்களு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இதேபோ‌ல், அ‌ரியலூ‌ர் மாவ‌ட்ட‌‌ம் ‌திருமனூ‌ர் ‌கிராம‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற ஜ‌ல்ல‌ி‌க்க‌ட்‌டி‌ல் 123 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். இ‌‌தி‌ல் 10 பே‌ரி‌ன் ‌நிலைமை ‌மிகவு‌ம் கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது.

இ‌தி‌ல் இலேசான காயமடை‌ந்தவ‌ர்க‌‌ளு‌க்கு அ‌ங்கு அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மரு‌த்துவ முகா‌‌மி‌ல் ‌சி‌கி‌ச்சைய‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. பல‌த்த காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்காக த‌ஞ்சாவூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.