1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மோடி வெற்றி குறித்து கருணாநிதி கருத்து

மோடி வெற்றி குறித்து கருணாநிதி கருத்து
காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்.

கடலூரில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த கருணாநிதியிடம், குஜராத்தில் மோடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, குஜராத்தில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம்தான் என்று குறிப்பிட்டார்.