1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌மி‌‌ழ் இன‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அரசு துரோக‌‌ம் : வைகோ!

ம‌த்‌திய அரசு வைகோ ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌‌ள் தமிழ்ச்செல்வன்
‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் தலைவ‌ர் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம.‌தி.மு.க பொது‌ச் செயலாள‌ர் வைகோ, இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ராடர்களையும், சக்தி வாய்ந்த இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கியது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம். தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக, தாய் மண்ணின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தோடு, ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி, சமாதான பேச்சுவார்த்தையை சமாதிக்கு அனுப்பியது சிங்கள அரசு தான் என்பது தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

தமிழ் குலத்தின் பிஞ்சுக் குழந்தைகளை, செஞ்சோலையில் குண்டு வீசிக்கொன்று ஒழித்த சிங்கள அரசு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவாலயத்திலும் நடுவீதியிலும் சுட்டுக்கொன்ற சிங்கள அரசு, தமிழ்ச்செல்வன் இருந்த நிலவறைத் தளத்தின் மீது சக்தி வாய்ந்த இராட்சதக் குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி இப்படுகொலையைச் செய்து உள்ளது.

இப்படி இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசிற்க்கு, பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் வழங்கி வரும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கமும் ராடர்களையும், சக்தி வாய்ந்த இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கியது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இந்த துரோகத்தில் ஈடுபடும் இந்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வரும் சிங்கள அரசு, தற்போது தமிழ்ச்செல்வனை கொன்ற படுபாதகச் செயலை உலக நாடுகள் கண்டித்திட முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் ஈழத்தின் தியாகப் புதல்வன் தமிழ்ச்செல்வன் மறைவினால் கண்ணீரில் தவிக்கும் தமிழ் ஈழ மக்களுக்கும், வீரச் சகோதரனைப் பறி கொடுத்து விட்டு வேதனையில் துடிக்கும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும், ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.