1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

பிரிட்டிஷ் பாப் பாடகியை மணந்தார் பீட்டர்சன்!

இங்கிலாந்து பீட்டர்சன் பிரிட்டன் பாப் பாடகி திருமணம்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பிரிட்டன் பாப் பாடகி ஜெஸ்ஸிக்கா டெய்லரை திருமணம் செய்துகொண்டார்.

தெற்கு இங்கிலாந்தின், இயற்கை எழில் மிக்க கேசில் கோம்ப் என்ற கிராமத்தில் உள்ள புனித ஆன்ட்ரூ திருக்கோயிலில் இந்த திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு இருவரது நெருங்கிய குடும்ப உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வருகை தந்தனர்.

இங்கிலாந்து அணியிலிருந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தேரன் காஃப், இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் மைக்கேல் வான், ஒரு நாள் அணித் தலைவர் பால் காலிங்வுட் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.