1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

நரே‌ன் கா‌ர்‌த்‌திகேயனு‌க்கு ‌பிரதம‌ர் வா‌ழ்‌த்து!

சீனா கார் பந்தய‌ம் நரேன் கார்த்திகேய‌ன் மன்மோகன் சிங் வாழ்த்து பார்முலா1
சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற தமிழக வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்முலா1 போட்டி வீரரான நரேன் கா‌ர்‌த்‌திகேய‌ன் சீனாவில் நடைபெற்ற ஏ1ஜிபி கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது இந்த வெற்றி மோட்டார் பந்தயங்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்திய இளம் தலைமுறையினரின் உற்சாகத்திற்கு உண்மையான பிரதிநிதியாக நரேன் கார்த்திகேயன் விளங்குவதாகவும் பிரதமர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

நரேன் பெற்ற வெற்றியின் மூலம் ஏ1ஜிபி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள 14வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.